Home » » சாவகச்சேரி புகையிரத நிலையத்தில் யாழ்தேவி ரயில் வருகைக்காக

சாவகச்சேரி புகையிரத நிலையத்தில் யாழ்தேவி ரயில் வருகைக்காக

சாவகச்சேரி புகையிரத நிலையத்தில் யாழ்தேவி ரயில் வருகைக்காக
காத்திருந்த மக்கள் யாழ் தேவியில் . , மஹிந்தா வந்ததால் நிக்காமல் சென்ற யாழ் தேவி .... மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்....
24 வருடங்களுக்கு பின்னர் யாழ்தேவி ரயில் இன்று முதல் யாழ்ப்பாணம் வரை சேவையில் ஈடுபடவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் மார்க்கம் இன்று திறந்துவைக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து வடபகுதிக்கான ரயில் சேவை உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் வரை விஸ்தரிக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின்போது 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 திகதி வடபகுதிக்கான ரயில் மார்க்கம் சேதமாக்கப்பட்டதை அடுத்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை ஸ்தம்பிதமடைந்திருந்தது.
யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவைகள் வடக்கு மற்றும் தெற்கு மக்களின் போக்குவரத்து மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாரிய பங்களிப்பு வழங்கும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்பிரகாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை இன்று சுபநேரத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
நாளை முதல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 4 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முதல் இரண்டு ரயில்களும் முறையே காலை 5.10 ற்கும், காலை 6.30 ற்கும் கல்கிசை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பிரதான ரயில்வே கட்டுப்பாட்டாளர் டி வி குணபால தெரிவித்துள்ளார்.
மூன்றாவது ரயில் சேவை மாலை 4.45 க்கும், இரவு தபால் ரயில் இரவு 7.45 க்கும் கொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
அத்துடன் முற்பகல் 11.55 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து மற்றுமொரு ரயில் யாழ்ப்பாணம் வரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது
இதேவேளை யாழ் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.25, முற்பகல் 11 மணி , பிற்பகல் 1.45 மற்றும் இரவு 9.45 ஆகிய நேரங்களில் கொழும்பு நோக்கிய ரயில் சேவைகள் ஆரம்பமாகவுள்ளன






Share this article :
Photobucket

New HD video

Photobucket
 
Support : Madduvil Tv
Copyright © 2014. MadduvilTv - All Rights Reserved